நாட்டின் ஒற்றுமைக்கு இந்தி முக்கியப் பங்காற்றியது! - வெங்கைய நாயுடு கருத்து

விகடன்  விகடன்
நாட்டின் ஒற்றுமைக்கு இந்தி முக்கியப் பங்காற்றியது!  வெங்கைய நாயுடு கருத்து

இந்திய துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, `நம் நாட்டின் ஒற்றுமைக்கும் மொழி நல்லிணக்கத்துக்கும் இந்தி, வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தைச் செய்துள்ளது' என்று கருத்து கூறியுள்ளார். தக்‌ஷிணா பாரத் இந்தி பிரசார சபாவின் 16-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட வெங்கைய நாயுடு இதைத் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து மேலும் கூறுகையில், `நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட பெரும்பாலானோர் பேசும் மொழியைத் தவிர, மிக சக்திவாய்ந்த ஒரு விஷயம் இருக்க முடியாது. அரசை நிர்வகிக்கவும் வழிநடத்தவும் மொழி உதவிபுரியும். ஏனென்றால், மொழிமூலம் கிடைக்கும் தகவலும் அறிவும் நல்ல குடிமக்களை உருவாக்கத் துணையாக இருக்கும். இந்தியாவின் ஒற்றுமைக்கும் மொழி நல்லிணக்கத்துக்கும் இந்தி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தைச் செய்துள்ளது. 'ஒரு நாடு, அதன் சொந்த மொழியைப் பேசும் வரை உண்மையில் அது விடுதலை பெற்றதாகக் கூறமுடியாது' என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது' என்று தெரிவித்தார். 
 

மூலக்கதை