முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் ஜானா நவோட்னா புற்று நோய் காரணமாக உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

பிராகா: செக் குடியரசை சேர்ந்த பிரபல முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜானா நவோட்னா(49) புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்று நோயால் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று காலமாகியுள்ளார். 1998-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜானா நவோட்னா சாம்பியன் பட்டம் வென்ற பெருமைக்குரியவர். இது தவிர்த்து கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் 16 பட்டங்களை நவோட்னா வென்றுள்ளார். அவரது மறைவுக்கு சர்வதேச டென்னிஸ் சங்க நிர்வாகிகள், முன்னாள் வீரர் - வீராங்கனைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை