ரூ.16 லட்சம் குறைந்த ஜாகுவார் கார்: காரணம் என்ன??

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
ரூ.16 லட்சம் குறைந்த ஜாகுவார் கார்: காரணம் என்ன??

ஜாகுவார் லேண்ட் ரோவர் தயாரிப்பில் எஸ்யுவி பிரிவில் ஜாகுவார் இ பேஸ் மாடல் வெளியாகயுள்ளது. இந்த மாடல் கார் ரூ. 16 லட்சம் குறைந்த விலையில் விற்கப்படவுள்ளதாம்.


    இந்த விலை குறைவுக்கான காரணம் இது உள்நாட்டில் தயரிக்கப்படுவதே ஆகும்.

2018 ஆம் ஆண்டுக்கான இப்புதிய மாடல் புணேயில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டு வெளி வருகிறது.
  எனவே, இங்கிலாந்தில் உள்ள லேண்ட் ரோவர் ஆலையில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு விற்பனை செய்தபோது இருந்த விலையை காட்டிலும் தற்போது 16 லட்சம் ரூபாய் விலை குறைவாக உள்ளது. இதன் மொத்த விற்பனை விலை ரூ. 60. 02 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
  சிறப்பு அம்சங்கள்: 
  # 2 லிட்டர் டீசல் என்ஜின், 132 பிஎஸ் மற்றும் 4,000 ஆர்பிஎம் திறனுடன் 430 நியூட்டன் மீட்டர் சக்தியை வெளியிடக் கூடிய வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.  
  # இதனால் 8. 7 விநாடிகளில் 100 கி. மீ.

வேகத்தை தொட்டுவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 208 கிலோ மீட்டர்.
  # ஸ்போர்ட்ஸ் காருக்குரிய வடிவமைப்போடு, 5 பேர் பயணிக்கும் வகையில் உள்ளது.  
  # வைஃபை ஹாட் ஸ்பாட் மற்றும் 10. 2 அங்குல தொடு திரை, பொழுது போக்கு அம்சங்களுக்கு வசதியாக 380 வாட்ஸ் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், ஜிபிஎஸ் நேவிகேஷன் ஆகியன உள்ளன.
  # பின்புற இருக்கைகள் மடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இம்மாத இறுதியில் புக்கிங் பெயரில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.

.

மூலக்கதை