ஏடிபி உலக டூர் பைனல்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல திமித்ரோவ் - காபின் மோதல்

தினகரன்  தினகரன்

லண்டன் : ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவ் - டேவிட் காபின் (பெல்ஜியம்) மோதுகின்றனர். சீசன் முடிவு தரவரிசையில் டாப் 8 இடத்தை பிடித்த வீரர்கள் மற்றும் ஜோடிகள் மோதும் இந்த தொடரின் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரருடன் (2வது ரேங்க்) மோதிய டேவிட் காபின் (26 வயது, 7வது ரேங்க்) 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார். 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன், உலக டூர் பைனல்சில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெடரருடன் 7வது முறையாக மோதிய காபின், முதல் முறையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரை இறுதியில் கிரிகோர் திமித்ரோவ் (6வது ரேங்க்) 4-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜாக் சாக்கை (8வது ரேங்க்) வீழ்த்தினார். பரபரப்பான இறுதி போட்டியில் திமித்ரோவ் - காபின் மோதுகின்றனர். இவர்கள் இருவரும் இதுவரை 5 முறை மோதியுள்ளதில், திமித்ரோவ் 4-1 என முன்னிலை வகிக்கிறார்.

மூலக்கதை