தங்கம்

தினமலர்  தினமலர்
தங்கம்

தங்­கம் மற்­றும் வெள்ளி விலை, கடந்த வாரம் உயர்ந்து, ஒரு மாத உச்­சத்தை தொட்­டது. சில வாரங்­க­ளாக, தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­யில், பெரி­தாக எந்த மாற்­ற­மும் இல்­லா­மல் வர்த்­த­க­மா­கி­யது.சர்­வ­தேச சந்­தை­யில், தங்­கத்­தின் விலை ஓர் அவுன்ஸ், 1,262 – 1,285 டாலர் என்ற அள­வி­லும், வெள்ளி விலை, 17.70 – 17.20 டாலர் வரை­யி­லும் இருந்­தது.இந்த சூழ­லில், கடந்த வார இறுதி நாட்­க­ளான, வியா­ழன், வெள்ளி ஆகிய தினங்­களில், விலை­யேற்­றம் காணப்­பட்­டது. சர்­வ­தேச சந்­தை­யில், அமெ­ரிக்க நாண­யத்­தின் விலை குறைவு, பங்­குச் சந்­தை­களின் தாக்­கம் ஆகி­யவை, இந்த விலை­யேற்­றத்­துக்கு கார­ணம்.அமெ­ரிக்க அதி­பர் கொண்டு வந்­துள்ள, புதிய வரி சீர்­தி­ருத்த முறை­கள் மற்­றும் வரி விகித குறைப்பு போன்ற நட­வ­டிக்­கை­கள் குறித்து ஏற்­பட்­டுள்ள சஞ்­ச­லம் கார­ண­மாக, அமெ­ரிக்க அரசு கரு­வூ­லங்­கள், ஆதா­யம் மிகுந்த சரிவை சந்­தித்­தது. இது, தங்­கம் விலைக்கு ஆத­ர­வாக அமைந்­தது.முத­லீட்­டா­ளர்­கள், தங்­க­ளது முத­லீட்டை கரு­வூ­லங்­களில் குறைத்து, தங்­கத்­தில் முத­லீடு செய்­த­னர்.பொது­வா­கவே, தங்­கம் ஒரு கனி­மம் என்­பதை காட்­டி­லும், ஒரு நாண­ய­மா­கவே கரு­தப்­ப­டு­கிறது. எந்­த­வொரு அசா­தா­ர­ண­மான சூழ­லி­லும், தங்­கம் தான், ஒரு முத­லீட்டு வாய்ப்­பாக கருதி நுக­ரப்­ப­டு­கிறது. ஆசிய நாடு­களில் மட்­டுமே, ஆப­ரண தேவை­யாக, பெரி­ய­ள­வில் கரு­தப்­ப­டு­கிறது. மற்ற நாடு­களில், தங்­கம் வெறும் முத­லீட்­டுக்­கான பொருளே.தங்­கத்தை பொறுத்­த­வரை, வரும் நாட்­களில், விலை உயர்ந்து காணப்­பட வாய்ப்­புள்­ளது. இதற்கு, அமெ­ரிக்க அதி­ப­ரின் தேர்­தல் பேச்சு, ரஷ்­யா­வு­ட­னான உறவு போன்­றவை கார­ண­மாக இருக்­கும்.

மூலக்கதை