காவல்துறையினரின் விசாரணைகளில் இளைஞன் பலி!!

PARIS TAMIL  PARIS TAMIL
காவல்துறையினரின் விசாரணைகளில் இளைஞன் பலி!!

காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் விசாரிக்கப்பட்டு வந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். காவல்துறையினர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 
 
குறித்த 24 வயதுடைய இளைஞன் கார்-து-நோரில் வைத்து கைது brigade des réseaux ferrés (BRF) படையினரால் கைது செய்யப்பட்டிருந்தான். பின்னர் குறித்த இளைஞன் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிந்துள்ளான். விசாரணைகளை பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் முன்னெடுத்துள்ளது. ஸ்பெயின் குடியுரிமை கொண்ட குறித்த இளைஞன் கடந்த நவம்பர் 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தான். இளைஞனின் உறவினர் ஒருவர் கொடுத்த புகார் ஒன்றின் அடிப்படையிலேயே தாம் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனினும் இளைஞனுக்கு மூளைச்சாவு ஏற்படுவதற்குரிய காரணம் சரியாக தெளிவுபடுத்தப்படவில்லை. பிரேத பரிசோதனைகளின் பின்னரே உண்மைகள் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் போது பதிவான கண்காணிப்பு கமரா காணொளிகளை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

மூலக்கதை