ஜனாதிபதி சாள்-து-கோலின் இறுதி மெய்பாதுகாவலர் உயிரிழப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜனாதிபதி சாள்துகோலின் இறுதி மெய்பாதுகாவலர் உயிரிழப்பு!!

முன்னாள் ஜனாதிபதி மற்றும் இராணுவ ஜெனரல் மதிப்புக்குரிய சால்-து-கோலின் நான்கு மெய்காவலர்களில், இறுதி வீரரும் உயிரிழந்துள்ளதாக நேற்று சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
92 வயதுடைய Roger Tessier, சாள்-து-கோலின் நான்கு முக்கிய மெய் பாதுகாவலர்களில் ஒருவராவார். gorilla என அழைக்கப்பட்டும் நான்கு பாதுகாவலர்களில் இவரும் ஒருவர்.  1947 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 23 வருடங்கள் அவர் சாள்-து-கோலின் மெய் பாதுகாவலராக பணி புரிந்துள்ளார். 'அவரிடம் ஒரு நம்பமுடியாத பலம் இருந்தது!' என அவரின் உறவினர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு இவரின் சுயசரிதை வெளியானது. அதில் இவர் குறிப்பிட்டதிலிருந்து, 'ஜெனரல் சாள்-து-கோல் மனித பாதுகாப்பு கவசத்தை அவர் ஒருபோதும் ஆதரித்ததில்லை. ஜெனரல் நவம்பர் 9, 1970 ஆம் ஆண்டு இறந்தபோது எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. என் தந்தை இறந்ததை விட அது என்னை பாதித்தது!' என குறிப்பிட்டிருந்தார். 
 
சாள்-து-கோல் ஜெனரலாக இருந்தபோது மெய் பாதுகாவலராக இருந்த நால்வரில் மூவர் முன்னதாகவே உயிரிழந்துள்ளமையும், Roger Tessier வெள்ளிக்கிழமை இரவு தனது 92 வயதில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை