டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்கும் என அமெரிக்க வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வாகன புகை, பொருட்களை எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

எங்கு பார்த்தாலும் புகை மூட்டமாக காணப்படுகிறது. இந்நிலையில், தற்போது பனிப்பொழிவு இருப்பதால் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.

புகை, பனிமூட்டத்தால் மக்கள் சுவாச கோளாறால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வாகனங்களை இயக்க கட்டுப்பாடு, மரங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தெளிப்பது, பொருட்களை எரிக்க தடை போன்றவை செயல்படுத்தப்படுகின்றன.

தன்னார்வலர்களும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் மாசுபாடு இன்னும் அதிகரிக்கும் என அமெரிக்க வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாகனங்கள், பொருட்கள் எரிக்கும் புகையுடன் பனியும் சேர்ந்து கொள்வதால், புகை மேலே செல்ல முடியாமல் தரைமட்டத்துக்கு அருகிலேயே இருக்கும்.

இதனால் புகை மூட்டம், மாசுபாடு அதிகரிக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை