கத்தரி, மிளகாய், தக்காளி பயிரிட விவசாயிகள் ஆர்வம்

தினமலர்  தினமலர்
கத்தரி, மிளகாய், தக்காளி பயிரிட விவசாயிகள் ஆர்வம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதி கிராம விவசாயிகள் கத்தரி, மிளகாய், தக்காளி பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இப்பகுதியைச் சுற்றி 50மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் மானாவாரி கண்மாய் பகுதிகளும் அடங்கும். அங்கு காய்கறிகள், பூக்கள் அதிகம் பயிடுவர். கண்மாய்கள் நிரம்பினால் மட்டும் நெல் பயிரிடுவர். இரண்டு ஆண்டுகளாக பருவமழையின்றி கண்மாய்கள் வறண்டன. மழையை நம்பி பயிரிட்ட காய்கறி, வெங்காயம், மிளகாய் செடிகள் கருகின. இந்த ஆண்டு லேசான மழை பெய்தது. அந்த மழை, நெல் பயிரிட போதுமானதாக இல்லை. அதனால் அப்பகுதியினர் கத்தரி, மிளகாய், தக்காளி அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் உதவி தோட்டக்கலை அலுவலகத்தில் நாற்று இலவசமாக வழங்கப்பட்டன. தக்காளி, கத்தரி நாற்று தலா 15 ஏக்கருக்கும், மிளகாய் நாற்று25 ஏக்கருக்கும், மா மர கன்றுகள் 10 ஏக்கருக்கும், மல்லிகை பூ கன்றுகள் 38 ஏக்கர் அளவிற்கும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விவசாயிகள் நாற்றுக்கள் கேட்டு வருகின்றனர்.

மூலக்கதை