வீடு தேடி வரும் மை டி.வி.ஸ்.,

தினமலர்  தினமலர்
வீடு தேடி வரும் மை டி.வி.ஸ்.,


பல்­வேறு நிறு­வன கார்­களின் பரா­ம­ரிப்பு பணியை, ஒரே குடை­யின் கீழ் மேற்­கொள்­ளும், மை டி.வி.எஸ்., நிறு­வ­னம், புதிய சேவையை அறி­மு­கம் செய்ய உள்­ளது. அந்­நி­று­வ­னம், ‘கார் டாக்’ எனும், அதன் சொந்த தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி, 8,400 வித குறை­பா­டு­களை, உட­னுக்­கு­டன் கண்­ட­றிய, தொழில்­நுட்­பத்தை கண்­டு­பி­டித்து உள்­ளது. மேலும், காரில் அடிக்­கடி ஏற்­ப­டக்­கூ­டிய, 500 வகை பழு­து­கள், வாடிக்­கை­யா­ளர் வீட்­டுக்கே சென்று, சரி செய்து தரப்­படும்.பழுது நீக்­கும் போது, முக்­கிய உதி­ரி­பா­கம் தேவைப்­பட்­டால், ஒரு மணி நேரத்­தில் அதை வர­வ­ழைப்­பர். அத­னால், பெரிய பழு­து­கள் கூட, 90 – 120 நிமி­டங்­க­ளுக்­குள் நீக்­கப்­படும். சென்­னை­யில், 20 வேன்­க­ளு­டன், இத்­திட்­டம் டிசம்­ப­ரில் துவங்­கப்­பட்டு, பின், மற்ற முக்­கிய நக­ரங்­க­ளுக்கு விரி­வு­ப­டுத்­தப்­படும்.

மூலக்கதை