டெஸ்லா: ‘பேட்­டரி’யால் இயங்­கும் லாரி அறி­மு­கம்

தினமலர்  தினமலர்
டெஸ்லா: ‘பேட்­டரி’யால் இயங்­கும் லாரி அறி­மு­கம்

ட்­டரி’யால் இயங்­கும் வாக­னங்­களை தயா­ரிப்­ப­தற்கு புகழ் பெற்ற, ‘டெஸ்லா’ நிறு­வ­னம், வர்த்­தக வாகன உற்­பத்­தி­யில் கால் பதித்­துள்­ளது. அது, ‘செமி’ எனும், சரக்கு வாக­னத்தை தயா­ரித்­துள்­ளது. இது, டீச­லால் இயங்­கும் லாரியை விட, சிறப்­பாக இயங்­கக் கூடி­யது என, மார்­தட்­டும் டெஸ்லா, 10 லட்­சம், கி.மீ., துாரம் பழு­தா­கா­மல் ஓடும் என, உறு­தி­யாக கூறி­யுள்­ளது. அதா­வது, பூமியை, 40 முறை சுற்றி வந்­தா­லும் பழு­தா­கா­தாம். இந்த லாரி­யு­டன் டிரெய்­லர் இணைக்­கப்­ப­டா­விட்­டால், புறப்­பட்ட, 5 வினா­டி­யி­லும், 36 டன் சரக்­கு­டன் கூடிய டிரை­லரை இணைத்­தால், 20 வினா­டி­யி­லும், 96 கி.மீ., வேகத்தை எட்­டும்.இந்த வாக­னத்­தில் உள்ள, ‘மெகா சார்­ஜரை’ அரை மணி நேரம் சார்ஜ் செய்­தால் கூட, 600 கி.மீ., துாரம் வரை நிற்­கா­மல் இயங்­கு­மாம். இதில், ‘கிளட்ச்’ இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இதில், பல தானி­யங்கி வச­தி­கள் உள்ளன. வெகு விரை­வில், ‘செமி’ சந்­தைக்கு வர­வி­ருக்­கிறது.

மூலக்கதை