நவ., 30 முதல் பங்குகள் வாங்கப்படும் ‘இன்போசிஸ்’ நிறுவனம் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
நவ., 30 முதல் பங்குகள் வாங்கப்படும் ‘இன்போசிஸ்’ நிறுவனம் அறிவிப்பு

புதுடில்லி: ‘இன்­போ­சிஸ்’ நிறு­வ­னம், 13 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள அதன் பங்­கு­களை, சந்­தை­யில் இருந்து திரும்­பப் பெற முடிவு செய்­துள்­ளது.நவ., 30 – டிச., 14 வரை, பங்­கு­களை திரும்­பப்பெற உள்­ள­தாக, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பி­டம், இன்­போ­சிஸ் தெரி­வித்­துள்­ளது.இதன்­படி, இந்­நி­று­வ­னம், ஒரு பங்­கிற்கு, 1,150 ரூபாய் என, விலை நிர்­ண­யம் செய்து, 11.30 கோடி பங்­கு­களை, சந்­தை­யில் இருந்து திரும்­பப் பெற திட்­ட­மிட்டு உள்­ளது.இன்­போ­சிஸ் துவங்கி, 36 ஆண்­டு­களில், முதன்­மு­றை­யாக, தற்­போது தான் பங்­கு­களை சந்­தை­யில் இருந்து திரும்­பப் பெறு­கிறது. இந்­நி­று­வ­னத்­தி­டம் உப­ரி­யாக உள்ள பங்கு மூல­த­னத்தை, பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு வழங்­கும் வகை­யில், பங்­கு­களை திரும்­பப் பெறும் திட்­டம் அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.இத்­திட்­டத்தை, பல ஆண்­டு­க­ளாக, இன்­போ­சிஸ் நிறு­வ­னர்­கள், முன்­னாள் மூத்த அதி­கா­ரி­கள் வலி­யு­றுத்­தி­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.சமீ­பத்­தில், டி.சி.எஸ்., நிறு­வ­னம், 16 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு, பங்­கு­களை திரும்­பப் பெற்­றது.

மூலக்கதை