பொருட்கள் மீது புதிய விலை ‘ஸ்டிக்கர்’ ஒட்ட அவகாசம்

தினமலர்  தினமலர்
பொருட்கள் மீது புதிய விலை ‘ஸ்டிக்கர்’ ஒட்ட அவகாசம்

புதுடில்லி : சமீ­பத்­தில், ஜி.எஸ்.டி., குறைக்­கப்­பட்ட, 200க்கும் மேற்­பட்ட பொருட்­கள் மீது, புதிய விலை­யு­டன் கூடிய, ‘ஸ்டிக்­கர்’ ஒட்ட, தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு, டிசம்­பர் இறுதி வரை அவ­கா­சம் அளிக்­கப்­பட்டு உள்­ளது.ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி.,எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி அம­லுக்கு வந்­தது. அப்­போது, பாக்­கெட்­டு­களில் அடைத்த பொருட்­கள் மீது, பழைய விலை­யு­டன், புதிய வரிப்­படி, அதி­க­பட்ச சில்­லரை விலையை குறிக்­கும், ‘ஸ்டிக்­கர்’ ஒட்ட வேண்­டும் என, உத்­த­ர­வி­டப்­பட்­டது.இதற்­கான கெடு, செப்­டம்­ப­ரில் இருந்து, டிச., இறுதி வரை நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது.இந்­நி­லை­யில், கடந்த வாரம், ஜி.எஸ்.டி., கவுன்­சில், 210 பொருட்­களின் வரியை குறைத்­தது. இதில், அன்­றா­டம் பயன்­படும், 178க்கும் அதி­க­மான பொருட்­களின் வரி, 28 சத­வீ­தத்­தில் இருந்து, 18 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டது. ‘ஏசி’ மற்­றும் சாதா­ரண ஓட்­டல்­க­ளுக்கு, 5 சத­வீத வரி விதிக்­கப்­பட்டு உள்­ளது. புதிய வரி விகி­தம், 15 முதல் அம­லுக்கு வந்­துள்­ளது.இந்­நி­லை­யில், மத்­திய நுகர்­வோர் விவ­கா­ரங்­கள் அமைச்­சர், ராம்­வி­லாஸ் பஸ்­வான் கூறி­ய­தா­வது:பாக்­கெட்­டு­களில் அடைக்­கப்­பட்ட பொருட்­கள் மீது, தற்­போது குறைக்­கப்­பட்ட, ஜி.எஸ்.டி.,யின் கீழ், குறைந்­துள்ள அதி­க­பட்ச சில்­லரை விலையை குறிக்­கும், ‘ஸ்டிக்­கர்’ ஒட்ட வேண்­டும் என, உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ளது. ஏற்­க­னவே உள்ள, பழைய விலை ஸ்டிக்­கர் அருகே, புதிய விலை, ‘ஸ்டிக்­கர்’ ஒட்ட வேண்­டும். டிச., இறுதி வரை, இதற்கு அவ­கா­சம் அளிக்­கப்­பட்டு உள்­ளது.ஜூலை, 1க்கு பின், தயா­ரித்த அல்­லது இறக்­கு­மதி செய்து விற்­கா­மல் உள்ள பொருட்­க­ளுக்­கும், இந்த உத்­த­ரவு பொருந்­தும். அவற்­றி­லும், புதிய அதி­க­பட்ச சில்­லரை விற்­பனை விலை, ‘ஸ்டிக்­கர்’ ஒட்ட வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை