‘மூடிஸ்’ நிறுவனம் ஆய்வறிக்கை வாகன சொத்து சார்ந்த கடன் பத்திரங்கள் இந்தியாவில் இழப்பு விகிதம் குறைவு

தினமலர்  தினமலர்
‘மூடிஸ்’ நிறுவனம் ஆய்வறிக்கை வாகன சொத்து சார்ந்த கடன் பத்திரங்கள் இந்தியாவில் இழப்பு விகிதம் குறைவு

புதுடில்லி : ‘வாகன சொத்­து­கள் சார்ந்த கடன் பத்­தி­ரங்­களை பொறுத்­த­வரை, இந்­தி­யா­வில், நிதி நிறு­வ­னங்­களின் இழப்பு விகி­தம் குறை­வாக உள்­ளது’ என, அமெ­ரிக்­கா­வின் தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ்’ தெரி­வித்­துள்­ளது.இந்­நி­று­வ­னம், 2009 –16 வரை­யி­லான காலத்­தில்,11,500 கோடி ரூபாய் மதிப்­பிற்கு, வாகன சொத்து சார்ந்த கடன் பத்­தி­ரங்­கள் குறித்து ஆய்வு மேற்­கொண்­டது. எட்டு நிதி நிறு­வ­னங்­களின், 70 வகை­யான வாகன சொத்து சார்ந்த கடன் பத்­தி­ரங்­கள்,ஆய்­வுக்கு எடுத்­துக்கொள்­ளப்­பட்­டன. அவற்­றில் பெரும்­பா­லா­னவை, வர்த்­தக பயன்­பாட்டு வாக­னங்­க­ளுக்கு அளித்த கட­னா­கும்.இந்த ஆய்­வில், வாகன சொத்து சார்ந்த கடன் பத்­தி­ரங்­களில், இழப்பு விகி­தம், சரா­ச­ரி­யாக, 1 சத­வீ­தம் என்ற அள­விற்கே உள்­ளது. வாகன சொத்து சார்ந்த கடன் பத்­தி­ரங்­களில் ஏற்­படும் இழப்பு விகி­தம், நாட்­டின் இதர பகு­தி­களை விட, தென் இந்­தி­யா­வில் மிகக் குறை­வாக உள்­ளது.மேலும், இவ்­வகை கடன் பத்­தி­ரங்­களில், வர்த்­தக வாக­னங்­கள் பிரி­வில், தென் இந்­தி­யா­வின் பங்கு, 40 சத­வீ­த­மாக இருக்­கிறது.இக்­க­டன் பத்­தி­ரங்­களில் ஏற்­படும் இழப்­பிற்கு, பல கார­ணங்­கள் இருந்­தா­லும், நாட்­டின் பொரு­ளா­தார சூழல் தான், முக்­கிய பங்கு வகிக்­கிறது.ஒரு நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி மந்­த­ம­டைந்­தால், அது, பல்­வேறு துறை­களில் உள்ள சுணக்க நிலையை உணர்த்­து­கிறது. இதன் கார­ண­மாக, உற்­பத்தி குறைவு, பண­வீக்க உயர்வு, வேலை­யில்­லாத திண்­டாட்­டம் உள்­ளிட்ட, பல பாதிப்­பு­கள் ஏற்­ப­டு­கின்றன.இந்­தி­யாவை பொறுத்­த­வரை, மதிப்­பீட்டு காலத்­தில், பொரு­ளா­தார வளர்ச்சி சீராக இருந்­தது. அத­னால், வாகன சொத்து சார்ந்த கடன் பத்­தி­ரங்­களில் ஏற்­பட்ட இழப்பு விகி­த­மும், மிகக் குறை­வாக உள்­ளது.கடன்­க­ளுக்­கான வட்டி விகி­தம் அதி­க­ரிக்­கும் போது, இழப்பு விகி­த­மும் அதி­க­ரிக்­கும்.வாகன கடன் வாங்­கு­வோ­ரின் தகுதி, அக்­க­டன்­களை திரும்­பப் பெறு­வ­தில் உள்ள இடர்ப்­பாடு ஆகி­ய­வற்றை ஆய்வு செய்த பின்னே, நிதி நிறு­வ­னங்­கள், வாகன கட­னுக்­கானவட்­டியை உயர்த்­தியோ அல்­லது குறைத்தோ நிர்­ண­யம் செய்­கின்றன.குறைந்த மதிப்­புள்ள வாக­னங்­க­ளுக்கு பெறப்­படும் குறைந்த கடன்­களில், இழப்பு விகி­தம், பிற­வற்றை விட குறை­வா­கவே உள்­ளது. குறிப்­பாக, ஓராண்­டிற்­கான கட­னில், இழப்பு விகி­தம் குறை­வாக காணப்­ப­டு­கிறது. அதிக மதிப்­புள்ள வாக­னங்­க­ளுக்கு பெறப்­படும் அதிக கடன் தொகை­யில், இழப்பு விகி­தம் அதி­க­மாக உள்­ளது.‘ஓர­ளவு நிதி வசதி உள்ள கடன்­தா­ரர்­கள், குறைந்த காலத்­தில், கடனை திரும்­பச் செலுத்­தக் கூடி­ய­வர்­க­ளாக உள்­ள­னர். இத­னால், குறு­கிய கால கடன்­களில், இழப்பு விகி­தம் குறை­வாக உள்­ளது’ என, ‘மூடிஸ்’ அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை