சிறிலங்காவில் சிங்கள கடையர்கள் மீண்டும் அட்டகாசம்

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்காவில் சிங்கள கடையர்கள் மீண்டும் அட்டகாசம்

சிறிலங்காவின் தென்பகுதியான காலியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களினால் சிறுபான்மை மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. 
 
காலி – ஜின்தோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு வன்முறைகளின் போது, பல வீடுகளும், வர்த்தக நிலையங்களும், வாகனங்களும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. 
 
வெளியிடத்தில் இருந்து வந்த சிங்களக் காடையர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
வெள்ளிக்கிழமை இரவு வந்த வெளியிடத்தை சேர்ந்த குழுவினரே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாக அங்கு சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
 
இந்த வன்முறைகளின் போது அந்த பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளன.
 
அந்த பகுதியிலுள்ள பௌத்த விகாரை ஒன்றுக்கு அருகிலேயே இந்த வன்முறைகளை மேற்கொண்ட குழுவினர் தங்கியிருந்தனர்.
 
நேற்று முன்தினம் சிங்கள மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு ஏற்பட்ட முறுகல் நிலை வன்முறையாக மாறியிருந்தது. 
 
இதனையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 
 
கடந்த இரு தினங்களாக இரவு நேரத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

மூலக்கதை