நொய்யல் தூய்மைப்பணி, 90 சதவீதம் நிறைவு:ஒரு ஆறு அழகாகிறது!

தினமலர்  தினமலர்
நொய்யல் தூய்மைப்பணி, 90 சதவீதம் நிறைவு:ஒரு ஆறு அழகாகிறது!

ஆக்கிரமிப்புகளால் சில இடங்களில் "சிக்கல்' கலெக்டர் திடீர் "விசிட்' பல்லடம் · நவ. 19- பல்லடத்தில் நடந்த உழவர் பாதுகாப்பு சிறப்பு முகாமை, கலெக்டர் திடீரென ஆய்வு செய்து, கேள்வியெழுப்பினார். உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம், பல்லடம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், உழவர் பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள விவசாயிகளின் குடும்பத்தினரிடம், கல்வி, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரணம் உள்ளிட்ட வைக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பல்லடம் தாசில்தார் சுப்ரமணியம் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.
முகாமுக்கு திடீரென வருகை புரிந்த கலெக்டர் பழனிசாமி, பயனாளிகள், மற்றும் அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். கல்வி உதவித்தொகை பெற வந்த பலர், இரண்டு, மற்றும் மூன்றாம் ஆண்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களிடம், "ஏன் முதல் ஆண்டிலேயே விண்ணப்பிக்கவில்லை?; முகாம் குறித்து, யார் தகவல் தந்தது?' என்று கேட்டார். அதிகாரிகளிடம், "முகாம் குறித்து கிராமங்கள் தோறும் அறிவிக்கப்பட்டுள்ளதா?' என்று கேள்வி எழுப்பினார். நேற்றைய முகாமில், பொதுமக்களிடம் இருந்து மொத்தம், 136 மனுக்கள் பெறப்பட்டன. இது குறித்து ஆய்வு செய்து, 10 நாட்களுக்கும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை