வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் எக்ஸ் : ஏர்டெல் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் எக்ஸ் : ஏர்டெல் அறிவிப்பு

புதுடில்லி: ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆன்லைனில் விற்பனை துவங்கியதும் விற்று தீர்ந்த நிலையில் இன்று (நவம்பர்-18) இரவு மீண்டும் விற்பனைக்கு வரயிருப்பதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றிரவு 8.00 மணிக்கு ஐபோன் எக்ஸ் மீண்டும் விற்பனைக்கு வரயிருக்கிறது.

முன்னதாக நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற விற்பனையில் ஐபோன் எக்ஸ் சில நிமிடங்களில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. ஏர்டெல் போன்றே பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களிலும் ஐபோன் எக்ஸ் விற்று தீர்ந்த நிலையில் மீண்டும் ஐபோன் எக்ஸ் விற்பனை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் ஐபோன் எக்ஸ் விற்று தீர்ந்ததாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ஐபோன் எக்ஸ் வாங்குவோருக்கு 70 சதவிகிதம் பைபேக் சலுகை வழங்கப்படுகிறது. எனினும் ஜியோ தளத்திலும் ஐபோன் எக்ஸ் விற்பனை துவங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் தளத்தில் கிடைக்கும் ஐபோன் எக்ஸ், ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அன்லாக் செய்யப்பட்ட சாதனமாக வழங்கப்படும் என்றும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே ஐபோன் எக்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு ஏர்டெல் இலவசமாக விநியோகம் செய்வதாக அறிவித்துள்ளது.

மூலக்கதை