நாச்சியார் டீசர் சர்ச்சைகளுக்கிடையே 30 லட்சம் பார்வைகள்

PARIS TAMIL  PARIS TAMIL
நாச்சியார் டீசர் சர்ச்சைகளுக்கிடையே 30 லட்சம் பார்வைகள்

 ஒரு படத்தைப் பற்றிப் பேச வைக்க வேண்டும் என்றால், அந்த படத்தைப் பற்றிய சர்ச்சையைக் கிளப்பினால் தான் இப்போதெல்லாம் படத்தைப் பற்றிப் பேச வைக்க முடியும். இப்படித்தான் கடந்த சில மாதங்களாக பலரும் அவர்களது படங்களைப் பற்றி ஏதாவது சர்ச்சைகளைக் கிளப்பி விடுகிறார்கள்.

 
அந்த வரிசையில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த 'நாச்சியார்' டீசரில் ஜோதிகா பேசும் அந்த கெட்ட வார்த்தை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த சர்ச்சையே அந்த டீசரை யு-டியுபில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடக்க வைத்துள்ளது.
 
ஜோதிகா இதற்கு முன் நடித்து வெளிவந்த 'மகளிர் மட்டும், 36 வயதினிலே' ஆகிய படங்களின் டீசரை விட இரண்டே நாட்களில் இந்தப் படத்தின் டீசர் 30 லட்சத்தைக் கடக்க அந்த கெட்ட வார்த்தையும், அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளும்தான் காரணமாக அமைந்துள்ளது.
 
பாலாவின் வழக்கமாக கதாபாத்திரப் படைப்புகள் தான் இந்தப் படத்திலும் இருக்கப் போகிறது என்ற சந்தேகத்தை ஜி.வி.பிரகாஷ்குமாரின் கதாபாத்திரம் ஏற்படுத்தியிருக்கிறது.
 
ஜோதிகா பேசும் அந்த கெட்ட வார்த்தை படத்தில் இடம் பெறுமா என்பது சந்தேகம் தான். இயக்குனர் பாலா, அவருடைய முந்தைய படமான 'பரதேசி' பட டீசரில் அவரே ஒருவரை அடி அடியென்று அடிக்க வைத்து அதை சர்ச்சைக்குள்ளாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை