சென்னை – பெங்களூரு 20 நிமிட பயணம்; அமெரிக்க நிறுவனத்தின், ‘ஹைப்­பர்­லுாப்’ திட்டம்

தினமலர்  தினமலர்
சென்னை – பெங்களூரு 20 நிமிட பயணம்; அமெரிக்க நிறுவனத்தின், ‘ஹைப்­பர்­லுாப்’ திட்டம்

பெங்களூரு : அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, ‘விர்­ஜின் ஹைப்­பர்­லுாப் ஒன்’ நிறு­வ­னம், ‘ஹைப்­பர்­லுாப்’ எனப்­படும், மின்­னல் வேக வாகன போக்­கு­வ­ரத்து குறித்த ஆய்வை, கர்­நா­ட­கா­வில் துவக்கி உள்­ளது. இதற்­காக, அம்­மா­நில அர­சு­டன், புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தாகி உள்­ளது.

‘‘பெங்­க­ளூ­ரு­டன், இதர தொழில் நக­ரங்­களை, ‘ஹைப்­பர்­லுாப்’ வாகன போக்­கு­வ­ரத்து மூலம் இணைப்­பது குறித்து, ஆய்வு மேற்­கொள்­ளப்­படும். சிறிய நிலப்­ப­ரப்­பில், குறைந்த கட்­டு­மான செல­வில், சிக்­க­ன­மான மின்­சா­ரத்­தில், ‘புல்­லட்’ ரயிலை விட அதி­வே­க­மாக, ‘ஹைப்­பர்­லுாப்’ வாகன போக்­கு­வ­ரத்தை செயல்­ப­டுத்­த­லாம்,’’ என, விர்­ஜின் ஹைப்­பர்­லுாப் ஒன் நிறு­வ­னத்­தின், சர்­வ­தேச செயல்­பாட்டு தலை­வர், நிக் இயர்லே தெரி­வித்து உள்­ளார்.

சிறிய விமான வடி­வி­லான, ஹைப்­பர்­லுாப் வாக­னம், மின்­காந்த விசை மூலம், நீண்ட குழாய் வழியே, மணிக்கு, 1,100 கி.மீ., வேகத்­தில் செல்­லக் கூடி­யது. இத்­திட்­டம் அம­லா­னால், சென்­னை­யில் இருந்து பெங்­க­ளூ­ருக்கு, 20 நிமி­டங்­களில் செல்­ல­லாம். ஹைப்­பர்­லுாப் ஒன் நிறு­வ­னம், உல­க­ள­வில், ஹைப்­பர்­லுாப் வாகன போக்­கு­வ­ரத்து திட்­டத்தை செயல்­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளது. இதற்­காக, இந்­தி­யா­வைச் சேர்ந்த இரு நிறு­வ­னங்­கள் உட்­பட, 10 நிறு­வ­னங்­கள் தேர்வு செய்­யப்­பட்டு உள்ளன.

இதில், எகாம் நிறு­வ­னம், சென்னை – பெங்­க­ளூரு இடை­யி­லான, 334 கி.மீ., துாரத்­திற்கு, ஹைப்­பர்­லுாப் போக்­கு­வ­ரத்­திற்­கான ஆய்­வில் ஈடு­பட்­டுள்­ளது. ஹைப்­பர்­லுாப் இந்­தியா நிறு­வ­னம், சென்னை – மும்பை இடை­யி­லான, 1,102 கி.மீ., ஹைப்­பர்­லுாப் போக்­கு­வ­ரத்து குறித்த ஆய்­வில் இறங்கி உள்­ளது.
சோதனை:
ஹைப்­பர்­லுாப் ஒன் நிறு­வ­னம், அமெ­ரிக்­கா­வின், லாஸ்­வே­காஸ் அருகே, பாலை­வ­னத்­தில், ஹைப்­பர்­லுாப் வாகன போக்­கு­வ­ரத்து சோத­னை­களை நடத்தி வரு­கிறது.

மூலக்கதை