இந்தியாவின் கடன் தகுதி மதிப்பு உயர்வு; மோடிக்கு, ‘மூடிஸ்’ கொடுத்த பூஸ்ட்

தினமலர்  தினமலர்
இந்தியாவின் கடன் தகுதி மதிப்பு உயர்வு; மோடிக்கு, ‘மூடிஸ்’ கொடுத்த பூஸ்ட்

புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த, தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ்’ இந்தியாவின் கடன் தகுதி மதிப்பை, 13 ஆண்டுகளுக்கு பின் உயர்த்தி உள்ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இந்­தி­யா­வில் தொட­ரும், பொரு­ளா­தா­ரம் மற்­றும் நிறு­வ­னங்­கள் சார்ந்த சீர்­தி­ருத்­தங்­க­ளால், அந்­நாடு உய­ரிய வளர்ச்­சியை காணும். அர­சின் கடன்­களை சமா­ளிக்­கும் வகை­யில், மிகப்­பெ­ரிய அள­வில், நிலை­யான நிதி வளம் உள்­ள­தால், நடுத்­தர கால அள­வில், அர­சின் பொதுக்­க­டன், படிப்­ப­டி­யாக குறை­யும். அதே சம­யம், இந்­தி­யா­வின் கட­னில், பெருங்­க­டன்­களின் சுமை­யும் கவ­லைக்­கு­ரி­ய­தாக உள்­ளது. பொரு­ளா­தார மந்த நிலை­யால், கடன் சுமை அதி­க­ரித்­தால் கூட, நாட்­டில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் சீர்­தி­ருத்­தங்­க­ளால், அந்த இடர்ப்­பாட்டை சமா­ளிக்­க­லாம்.அத­னால், மத்­திய அர­சின் உள்­நாட்டு கரன்சி மற்­றும் அன்­னிய செலா­வ­ணி­யி­லான கடன் பத்­திர வெளி­யீ­டு­க­ளுக்­கான, தர நிர்­ணய அள­வீடு, ‘பி.ஏ.ஏ., – 3’ என்ற நிலை­யில் இருந்து, ஒரு படி உயர்த்தி, ‘பி.ஏ.ஏ., – 2’ ஆக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.

நாட்­டின் கடன் தகுதி மதிப்­பீடு, சாத­க­மான நிலை­யில் இருந்து, ஸ்தி­ர­மான நிலைக்கு உயர்த்­தப்­பட்டு உள்­ளது. இந்­தி­யா­வில், பல முக்­கிய சீர்­தி­ருத்­தங்­கள், இன்­னும் திட்ட வடி­வி­லேயே உள்ளன. எனி­னும், நடை­மு­றைக்கு வந்த சீர்­தி­ருத்­தங்­க­ளால், வர்த்­த­கச் சூழல் மேம்­பட்டு உள்­ளது; உற்­பத்­தித் திறன் உயர வழி­வ­குத்து உள்­ளது. உள்­நாடு மற்­றும் அன்­னிய முத­லீ­டு­கள் அதி­க­ரிக்க துணை புரிந்­து உள்­ளது. இந்­தி­யா­வின் வலு­வான வளர்ச்­சி­யும், சீர்­தி­ருத்­தங்­களும், எத்­த­கைய இடர்ப்­பா­டு­களை எதிர்­கொள்­ள­வும், உல­க­ள­வில் அதி­க­ரித்து வரும் போட்­டியை சமா­ளிக்­கக் கூடிய ஆற்­ற­லை­யும் அளிக்­கும்.

ஜி.எஸ்.டி., மாநி­லங்­கள் இடை­யி­லான வர்த்­தக தடை­களை அகற்றி, உற்­பத்தி உயர வழி­வ­குத்து உள்­ளது. பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை, ‘ஆதார்’ இணைப்பு, பய­னா­ளி­க­ளுக்கு நேரடி மானி­யம் உள்­ளிட்ட பல சீர்­தி­ருத்­தங்­கள், கறுப்பு பொரு­ளா­தா­ரத்­தின் பங்கை குறைக்க வழி செய்­துள்ளன. வங்கி வாராக்­க­டன் பிரச்­னைக்கு, மறு பங்கு முத­லீட்டு திட்­டம் தீர்­வ­ளிக்­கும். எனி­னும், நிலம் மற்­றும் தொழி­லா­ளர் சந்தை சார்ந்த சீர்­தி­ருத்­தங்­கள், மாநில அர­சு­க­ளு­டன் தொடர்­பு­டை­யது என்­ப­தால், பய­ன­ளிக்க சில காலம் ஆகும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

பயன்கள்:
* மத்­திய அரசு மற்­றும் கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள், வெளி­நா­டு­களில் திரட்­டும் கடன்­க­ளுக்­கான செல­வி­னம் குறை­யும்* இந்­திய பங்­குச் சந்­தை­கள் ஏற்­றம் காணும்.

காலம் கடந்த அங்கீகாரம்:
நாட்­டின் கடன் தகுதி மதிப்­பீடு, 13 ஆண்­டு­க­ளுக்கு பின் உயர்த்­தப்­பட்­டதை வர­வேற்­கி­றோம். எனி­னும் இது, சில ஆண்­டு­க­ளாக, மத்­திய அரசு, பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்த மேற்­கொண்ட முயற்­சி­க­ளுக்கு, காலம் கடந்து கிடைத்த சர்­வ­தேச அங்­கீ­கா­ரம் ஆகும். இந்­திய பொரு­ளா­தார வளர்ச்சி குறித்து ஐயம் தெரி­வித்­தோர், தங்­களை சுய பரி­சோ­தனை செய்து கொள்­வர் என, நம்­பு­கி­றேன்.
-அருண் ஜெட்லி, மத்திய நிதி அமைச்சர்

மூலக்கதை