மாநில நிர்வாகத்தை கண்காணிக்க கவர்னருக்கு உரிமை உள்ளது: கர்நாடக முதல்வர் முன்னாள் எஸ்.எம்.கிருஷ்ணா

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாநில நிர்வாகத்தை கண்காணிக்க கவர்னருக்கு உரிமை உள்ளது: கர்நாடக முதல்வர் முன்னாள் எஸ்.எம்.கிருஷ்ணா

பெங்களூர்: கர்நாடக முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், மகாராஷ்டிர ஆளுநராகவும் பதவி வகித்தவர் எஸ். எம். கிருஷ்ணா. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் முக்கிய பொறுப்புகளை வகித்த அவர், அண்மையில் பாஜகவில் இணைந்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்டத்தில் அதிகாரிகளுடன் நடத்திய திடீர் ஆய்வுக் கூட்டம் தொடர்பாக எஸ். எம். கிருஷ்ணா அளித்த பேட்டி:
தமிழக ஆளுநர் ராஜ்பவனில் ஓய்வெடுக்காமல் ஆக்கப்பூர்வமாக நல்ல வேலை செய்திருக்கிறார்.

தமிழகத்தை புரிந்துகொள்ளவும் அரசு நிர்வாகத்தை அறிந்துகொள்ளவும் ஏதோ செய்திருக்கிறார். அதனை தவறாக புரிந்துகொள்ளக் கூடாது.

ஆளுநரின் செயல்பாட்டை அரசியல் ஆக்கக் கூடாது. இந்திய அரசமைப்பு சட்டம் ஆளுநருக்கு சில முக்கியமான அதிகாரத்தை வழங்கி இருக்கிறது.

கடந்த காலங்களில் சிலர் அதனை சரியாக பயன்படுத்தாமல் இருந்ததால் ஆளுநருக்கு அதிகாரமே இல்லை என பொருள் இல்லை.

ஒரு மாநிலத்தின் ஆட்சி, அதிகாரம், நிர்வாக செயல்பாடுகளை கண்காணிக்கவும், ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறவும் ஆளுநருக்கு உரிமை உள்ளது. ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, மாற்றத்தை கொண்டுவந்தால் அதை வரவேற்க வேண்டும்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு சரியாக செயல்படுகிறதா? மக்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது என ஆளுநர் தெரிந்து கொள்ளலாம். அந்தப் பிரச்சினைகளை தீர்க்குமாறு அரசை வலியுறுத்தலாம்மத்தியில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் மறைமுக ஆட்சி நடத்த விரும்பாது.

அதற்கான அவசியமும் இல்லை. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது.

தமிழக அரசுக்கு தேவையான பல திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே எதிர்க்கட்சியினர் தேவையில்லாமல் இதை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.

இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.

.

மூலக்கதை