டெல்லியில் சரக்கு வாகனங்கள் இயக்க தடை ரத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லியில் சரக்கு வாகனங்கள் இயக்க தடை ரத்து

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலைகளில் புழுதி பறக்காமல் இருக்க தண்ணீர் தெளிப்பது, செயற்கை மழை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

காற்று மாசுபாடு காரணமாக டெல்லி நகருக்குள் சரக்கு வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கவர்னர் அனில் பைஜால் இந்த தடையை ரத்து செய்ய அனுமதி வழங்கியுள்ளார்.

ஆனாலும், சரக்கு வாகனங்கள் டெல்லி நகருக்குள் வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாகன பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், பார்க்கிங் கட்டணமும் 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தி வருகிறார்.

.

மூலக்கதை