கோடநாடு கொலை வழக்கு கோர்ட்டில் 3 பேர் ஆஜர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோடநாடு கொலை வழக்கு கோர்ட்டில் 3 பேர் ஆஜர்

ஊட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேட் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி இந்த எஸ்டேட்டிற்குள் நுழைந்த 11 பேர் கொண்ட கும்பல், அங்கு காவலில் இருந்த இரவு நேர காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. தொடர்ந்து, பங்களாவிற்குள் சென்ற அந்த கும்பல் நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளியான சயான் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதுதவிர இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஜித்தின் ஜோய் மற்றும் ஜம்சீர் அலி ஆகியோரை வாகன திருட்டு வழக்கில் கேரள போலீசார் கைது செய்து, அவர்களை கேரள சிறையில் அடைத்தனர்.

மற்ற குற்றவாளிகளான மனோஜ்சாமி, குட்டிபிஜின், சந்தோஷ்சாமி, தீபு, சதீஷன், உதயகுமார், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சயான், மனோஜ்சாமி, சதீசன் ஆகிய மூவரும் கோத்தகிரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி தர் உத்தரவிட்டார்.

.

மூலக்கதை