டிசம்பர் 1ம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியா வருகை

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிசம்பர் 1ம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியா வருகை

புதுடெல்லி: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, டிசம்பர் 1ம் தேதியன்று இந்தியா வருகை தரவுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ஓய்வுக்கு பின்னர் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்காக ஒபாமா டிசம்பர் 1ம் தேதியன்று இந்தியா வருகிறார்.

டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒபாமா, ‘மக்களின் செயல்பாடு மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்கள்’ குறித்த தலைப்பில் பேசுகிறார். இதுகுறித்து ஒபாமாவின் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கலாசாரம், பன்மொழி தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை போன்றவற்றில் சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது.

35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா.

புதுமையான செயல்பாடுகளால் இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு அதிகம். இதன்மூலம் உலக நாடுகளும் பயன்பெறும்.

இதுபோன்ற காரணங்களுக்காக இந்தியாவில் ஒபாமா உரையாற்றவுள்ளார். இளைஞர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரும்பட்சத்தில் நாடு முன்னேற்றம் அடையும் என்பதில், ஒபாமா ஆழமான நம்பிக்கை வைத்துள்ளார்’’ என கூறப்பட்டுள்ளது.

ஜெர்மனி, இந்தோனேசியா, பிரேசில் ஆகிய நாடுகளில் இதேபோன்ற நிகழ்ச்சியில் ஒபாமா பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.



.

மூலக்கதை