பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா மீட்க வேண்டும்: முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா மீட்க வேண்டும்: முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா மீட்க வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா டுவிட்டாில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கடந்த வாரம் பேசும்பொழுது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் நாட்டுக்கு உரியது என கூறி சர்ச்சையை எழுப்பினார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியா எடுத்து கொள்ள அனுமதிக்கும் அளவிற்கு பாகிஸ்தான் பலவீனம் வாய்ந்த நாடு அல்ல என நேற்று அவர் தொண்டர்கள் முன் பேசினார்.   அவர்கள் கைகளில் வளையல்கள் அணிந்திருக்கவில்லை என்றும் கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆஹிர் பேசும்பொழுது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என நான் கூறுகிறேன்.

 

அப்பகுதியை திரும்ப பெற நாம் முயற்சி செய்தோமென்றால் அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார். பாகிஸ்தானிடம் இருந்து அந்த பகுதியை திரும்ப பெற இந்தியா முயற்சிகள் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் பரூக் அப்துல்லாவின் மகனும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாம் முயற்சி செய்தால் என்ற வார்த்தையின் அர்த்தம் எனக்கு புரியவில்லை.   காஷ்மீர் பகுதியை திரும்ப பெறுவதில் எது உங்களை தடுக்கிறது?  வெற்று வார்த்தைகளை விட உங்களது செயல்களால் பரூக் அப்துல்லா கூறியது தவறு என நிரூபியுங்கள் என தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை