மதுராந்தகத்தில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதுராந்தகத்தில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு பல நாட்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. வாகனங்களில் விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீரும் போதுமானதாக இல்லாததால் மக்கள் தவித்துவந்தனர்.

சீரான குடிநீர் வழங்கக்கோரி மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்துக்கு பலமுறை மக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், மதுராந்தகம் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப போக்கை கண்டித்து பெண்கள் உள்பட பலர் காலி குடங்களுடன் இன்று காலை மதுராந்தகம்-தச்சூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மரக்கட்டைகளை போட்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனால் அவ்வழியாக சென்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் துணை வட்டாட்சியர் ராஜேந்திரன், துரைராஜ், மதுராந்தகம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மறியல் செய்தவர்களை சமாதானப்படுத்தினர்ன.

இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.


.

மூலக்கதை