ஜிஎஸ்டிக்கு காங். முதல்வர் திடீர் ஆதரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜிஎஸ்டிக்கு காங். முதல்வர் திடீர் ஆதரவு

சண்டிகர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அம்ரிந்தர் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்துக்கு ஜிஎஸ்டி நல்லது என சான்றிதழ் கொடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. இதனால் சிறுவியாபாரிகள் மற்றும் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

நிறைய பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து பல பொருட்களின் மீதான வரியை ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்து வருகிறது.

ஜிஎஸ்டி விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமா்சித்து வரும் ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி மாற்றி அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் ஜிஎஸ்டிக்கு ஆதரவாக காங்கிரஸ் முதல்வர் கருத்து தெரிவித்திருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



இது தொடர்பாக சண்டிகரில் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் கூறியதாவது: ஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லது. இதைத்தான் நான் நீண்டகாலமாக கூறி வருகிறன்.

ஜிஎஸ்டி வாிக்கும் காங்கிரசுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அதிகபட்சி வரியைத்தான் காங்கிரஸ் எதிர்க்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த சிறுவியாபாரிகள் , தொழிலதிபர்களின் மூல ஆதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறு அம்ரிந்தர் சிங் கூறினார்.


.

மூலக்கதை