ஜிம்பாப்வேயில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜிம்பாப்வேயில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்

புதுடெல்லி: ராணுவ புரட்சி நடைபெற்றிருப்பதாக கூறப்படும் ஜிம்பாப்வேயில் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வேயில் ராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபே வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தென்னாப்ரிக்க அதிபர், ஜேக்கப் ஜுமா தெரிவித்துள்ளார்.



இதனை அந்நாட்டு ராணுவம் மறுத்துள்ளது. அதிபர் முகாபேவை சுற்றியுள்ள அச்சுறுத்தல்களை ஒழிக்கவும், அவரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கவுமே, தலைநகர் ஹராரேவில், ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வேயில் ஏராளமான இந்தியர்கள் உள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து அவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜிம்பாப்வேயிலுள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை