ஜிம்பாப்வேயில் அரசுக்கு எதிராக ராணுவம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜிம்பாப்வேயில் அரசுக்கு எதிராக ராணுவம்

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் அரசுக்கு எதிராக ராணுவம் செயல்பட்டு வருகிறது. தலைநகர் ஹராரேவில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்தை ராணுவம் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளன.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் அதிபர் ராபர்ட் முகாபே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 93 வயதான அதிபருக்கும், துணை அதிபரான மனன்காக்வேக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.

சமீபத்தில் துணை அதிபர் நீக்கப்பட்டார். இதனால் இரு ஆதரவாளர்கள் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

துணை அதிபருக்கு ஆதரவாக அந்நாட்டு ராணுவம் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

இந்நிலையில், ஜிம்பாப்வேயில் ராணுவ புரட்சி நடைபெறும் சூழல் உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அசாதாரண சூழலில், தலைநகர் ஹராரேயில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை நேற்று ராணுவம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

மேலும், ஹராரேவின் புறநகர் பகுதியில் துப்பாக்கி, பீரங்கிகள் சத்தம் கேட்டுள்ளது. இதனால் மக்கள் பதட்டம் அடைந்தனர்.

அரசை கைப்பற்ற போவதில்லை என்றும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதேபோல், ஜிம்பாப்வேயில் ராணுவ புரட்சி எதுவும் நிகழ வாய்ப்பில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிபர் ராபர்ட் முகாபே இதுவரை எவ்வித கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை