ஜல்லிக்கட்டை ஆதரித்துப் பேசிய காவலர் மதியழகன்மீது துறைரீதியான நடவடிக்கை?

விகடன்  விகடன்
ஜல்லிக்கட்டை ஆதரித்துப் பேசிய காவலர் மதியழகன்மீது துறைரீதியான நடவடிக்கை?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஆதரித்துப் பேசிய காவலர் மதியழகன்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் கடந்த ஜனவரி மாதம் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் சீருடையுடன் பேசிய காவலர் மதியழகன் 'காவலனாக இல்லாமல், ஒரு தமிழனாகவே இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எனக்கு பயமில்லை.
ஜல்லிக்கட்டு விளையாட்டின் மகத்துவம் தெரியாமல் சிலர் தடை ஏற்படுத்தி உள்ளனர். இது கண்டிப்பாக உடைக்க வேண்டும். வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையில் உள்ளனர். அவர்களுக்காகவும் இளைஞர்கள் போராட வேண்டும். மேலும், தமிழர்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் இளைஞர்கள் போராட வேண்டும். இங்குள்ள அனைத்துக் காவலர்களுக்குமே இதேபோன்ற எண்ணத்தில்தான் உள்ளனர்' என்றார். அவரை இளைஞர்கள் தூக்கிவைத்து கொண்டாடினர்.

இந்தநிலையில், காவலர் மதியழகன்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆயுதப்படை காவலராகப் பணியாற்றிவரும் மதியழகனுக்கு விசாரணை முடியும்வரை பதவி மற்றும் ஊதிய உயர்வு கிடையாது என்று கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.   

மூலக்கதை