அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த சிறிலங்கா!

PARIS TAMIL  PARIS TAMIL
அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த சிறிலங்கா!

 அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. 

 
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பொது நிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன இந்த தகவலை வெளியிட்டார். 
 
2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளங்கள் 15 வீதத்தினால் உயர்த்தப்படும்.
 
இதன்படி, அலுவலக உதவியாளர் ஒருவரின் சம்பளம் 23600 ரூபா வரையில் உயர்த்தப்படும்.
 
சட்ட மா அதிபரின் சம்பளம் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வரையில் உயர்த்தப்படும்.
 
மருத்துவர்களின் அடிப்படைச் சம்பளம் 60000 ரூபாவிலிருந்து 69756 ரூபாவாக உயர்த்தப்படும்.
 
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்காக ஆண்டொன்றுக்கு 12 பில்லியன் ரூபா மேலதிகமாக நிதி தேவைப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை