ஈரான், ஈராக் பூகம்ப பலி 450 ஆனது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஈரான், ஈராக் பூகம்ப பலி 450 ஆனது

டெக்ரான்: ஈரான் ஈராக் எல்லையில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7. 3 ஆக பதிவானது.

இதில் பலியனோர் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது. ஈரான், ஈராக் நாடுகளின் எல்லையில் ஜக்ரோஸ் மலைப்பிரதேசம் உள்ளது.

இதன் பெரும் பகுதி ஈரான் எல்லைக்குள் கெர்மான்ஷா என்ற மாகாணத்துக்குள் இருக்கிறது. ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தின் கிழக்கு நகரான ஹலாப்ஜாவும் இந்த மலைப்பகுதியில் அமைந்த முக்கிய நகராகும்.

இவை அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகும் அபாயகர பகுதிகள் ஆகும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று இப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 23. 2 கிலோ மீட்டர் ஆழத்தில் 31 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவில் 7. 3 புள்ளியாக பதிவானது.

இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. நிலநடுக்கம் காரணமாக பல மாடி கட்டிடங்கள் சரிந்தன.



பல கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அலறியடித்தவாறு வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

எனினும் பலத்த நில அதிர்வு காரணமாக 10 கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின. ஈரானின் சர்போல் இ ஜகாப் என்ற சிறுநகரம் முற்றிலுமாக சேதம் அடைந்தது.

அங்குள்ள 2 மருத்துவமனைகளும் பலத்த சேதம் அடைந்ததால் நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேற்கு ஈரானில் ஏற்பட்ட மிக பயங்கர நிலநடுக்கம் இது என அந்நாட்டு புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை