ஆபாச சிடி வெளியீடு பாஜவின் திட்டமிட்ட சதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆபாச சிடி வெளியீடு பாஜவின் திட்டமிட்ட சதி

அகமதாபாத்: என்னைப்பற்றி ஆபாச சிடி வெளியிட்டிருப்பது பாஜவின் திட்டமிட்ட சதி. இத்தகைய விரும்பத்தகாத செயல்களுக்கு, தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என ஹர்திக் படேல் கூறினார்.

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 9 மற்றும்  14 தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சியினரும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.படேல் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும், ஹர்திக் படேல், பா. ஜ. ,வுக்கு எதிரான கடும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரசுடன் கூட்டணி அமைக்க போவதாகவும் வெளியாகி உள்ளது.

இதற்காக அவர் முன்வைத்த இடஒதுக்கிடு நிபந்தனையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஹர்திக் படேல், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற, ‘சிடி’ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, ஹர்திக் படேல் கூறியதாவது: இது பா. ஜ. வின் திட்டமிட்ட சதி. இது போன்ற, 100 போலி சிடிக்களை அவர்களால் வெளியிட முடியும்.

என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதாக எண்ணி, குஜராத் மாநில பெண்களை இழிவுபடுத்தியுள்ளனர். என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

இத்தகைய செயல்களுக்கு, வரும் தேர்தலில், மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை