காஷ்மீர் முன்னாள் முதல்வர் மீது தேசதுரோக வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மீது தேசதுரோக வழக்கு

பாட்னா: ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என சர்ச்சை கருத்து கூறிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் பாருக் அப்துல்லாவுக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்ய பீகார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது.

இதுதொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனை முறை போர் நடத்தினாலும் எதுவும் நடக்கப்போவதில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா சமீபத்தில் பேசியிருந்தார்.   அவரது இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், பீகாரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், பாருக் அப்துல்லா சர்ச்சைக்குரிய கருத்து குறித்து வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார்.

இதையடுத்து, பாருக் அப்துல்லாவுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

.

மூலக்கதை