விவசாயத்திற்கு சிறுநீர் பயன்படுத்துங்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விவசாயத்திற்கு சிறுநீர் பயன்படுத்துங்கள்

நாக்பூர்: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நேற்று நாக்பூரில் பேசியதாவது , ஒவ்வொரு மாவட்டத்திலும் , தாலுகாவிலும்  சிறுநீர் வங்கி உருவாக்க வேண்டும். அப்படி சேகரிக்கும் சிறுநீரிலிருந்து யூரியா எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

சிறு நீரில் நைட்ரஜன் சத்துகள் இருப்பதால்  பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற உரங்களுக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்.

சுவீடன் அறிவியல் ஆய்வாளர்கள் சிறு நீரை பரிசோதனை செய்ததில் அதில் நைட்ரஜன் சத்துகள் அதிகமாக இருப்பதாக உறுதி செய்துள்ளனர்.

இனி வரும் காலங்களில்  விவசாயதிற்கு உரத்திற்கு பதிலாக சிறுநீரை பயன்படுத்தலாம். ஏற்கனவே சிறு நீரை பரிசோதனை செய்ததில் தாவரங்கள் வளர அனைத்து சத்துகளும் அதில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

விவசாயிகள் வரும் காலங்களில் விவசாயத்திற்கு சிறுநீர் யூரியாவை பயன்படுத்தலாம்.
இவ்வாறு கட்காரி பேசினார்.

.

மூலக்கதை