உலக கோப்பையை வென்றபோது டெண்டுல்கருக்கு 38 வயது

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக கோப்பையை வென்றபோது டெண்டுல்கருக்கு 38 வயது

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் டோனி, குறைந்தபட்சம் டி20 போட்டிகளில் இருந்தாவது ஓய்வு பெற வேண்டும் என்ற குரல்கள் வலு பெற்று வருகின்றன. இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் முன்னாள், இந்நாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரிசையில், இந்தியாவுக்கு முதல் முறையாக உலக கோப்பையை வென்று கொடுத்த (1983ம் ஆண்டில்) முன்னாள் கேப்டன் கபில்தேவ், டோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘’ஒரு சில சராசரி செயல்பாட்டிற்காக, ஒரு சிலர் ஏன் இப்படி பேசுகின்றனர்? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நாம் உலக கோப்பையை வென்றபோது (2011ம் ஆண்டில்) சச்சின் டெண்டுல்கருக்கு 38 வயது. இன்னும் சில ஆண்டுகள், டோனி தனது விளையாட்டில் உயர்வானவராக இருப்பார் என எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.

டோனிக்கு தற்போது 36 வயது ஆவது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை