பெட் கோப்பை டென்னிஸ் 18வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அமெரிக்கா

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெட் கோப்பை டென்னிஸ் 18வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அமெரிக்கா

மின்ஸ்க்: மகளிர் மட்டும் பங்கேற்கும் முதன்மையான குழு டென்னிஸ் போட்டியான பெட் கோப்பை தொடரின் இறுதி போட்டி, பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க் நகரில் நடைபெற்று வந்தது. அமெரிக்கா-பெலாரஸ் அணிகள் மோதின.

ஒற்றையர் மற்றும் மாற்று ஒற்றையர் ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலை வகித்தன. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும், இரட்டையர் ஆட்டத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதில், அமெரிக்காவின் கோகோ வாண்டெவெகே-ஷெல்பி ரோஜர்ஸ் ஜோடி, 6-3, 7-6 (3) என்ற செட் கணக்கில், பெலாரஸின் சபலென்கா-அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சை வீழ்த்தியது.

இதன்மூலம் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்கா, 2000ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 1963ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் பெட் கோப்பை தொடரில், அமெரிக்கா ஒட்டுமொத்தமாக 18 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

மிக அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி அமெரிக்காதான். இதற்கு அடுத்த அடுத்த இடத்தில் செக் குடியரசு (10 முறை சாம்பியன்) உள்ளது.

மறுபக்கம் பெலாரஸ் அணி முதல் முறையாக தற்போதுதான் இறுதி போட்டியில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை