டோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவதை பார்க்க சில பொறாமைக்காரர்கள் காத்திருக்கின்றனர்: ரவி சாஸ்திரி காட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவதை பார்க்க சில பொறாமைக்காரர்கள் காத்திருக்கின்றனர்: ரவி சாஸ்திரி காட்டம்

கொல்கத்தா: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து, 36 வயதாகி விட்ட டோனி ஓய்வு பெற வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்க தொடங்கி விட்டன. குறைந்தபட்சம் டி20 போட்டிகளிலாவது இளம் வீரர்களுக்கு டோனி வழிவிட வேண்டும் என விவிஎஸ் லட்சுமணனும், அஜீத் அகர்கரும் கூறி, இந்த விவாதத்தை தொடங்கி வைக்க, ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், டோனிக்கு பதில் மாற்று வீரரை தேர்வு செய்யலாம் என கங்குலி ெதரிவித்தார். ஆனால் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, சமீபத்தில் ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா உள்ளிட்டோர் டோனிக்கு ஆதரவு தெரிவித்தனர்.



இந்த வரிசையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இணைந்துள்ளார்.   இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘’டோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைவதை பார்க்க, பொறாமை பிடித்த சிலர் காத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் டோனி போன்ற மிக சிறந்த வீரர்கள், தங்கள் எதிர்காலம் குறித்து சொந்தமாக முடிவு எடுப்பார்கள்.

டோனியின் மதிப்பை இந்திய அணி நன்றாக புரிந்து வைத்துள்ளது. டோனி மீதான விமர்சனங்கள் எனக்குள் எந்த மாற்றத்தையும் உண்டாக்கவில்லை.

டோனி ஒரு சூப்பர் ஸ்டார். எங்களின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களில் டோனியும் ஒருவர்.

அவர் ஒரு லெஜண்ட் என்பதால்தான், எப்போதும் விவாதங்களின் தலைப்பாக இருக்கிறார். உங்கள் வாழ்க்கை புகழ்பெற்றதாக இருக்கும்போது, நீங்களும் தொலைக்காட்சிகளின் தலைப்பாகி விடுவீர்கள்’’ என்றார்.


.

மூலக்கதை