கஸ்தூரி, கமல் கட்சியில் சேர முடிவா?

PARIS TAMIL  PARIS TAMIL
கஸ்தூரி, கமல் கட்சியில் சேர முடிவா?

கமல்ஹாசன் கட்சியில் சேர கஸ்தூரி முடிவு செய்து இருப்பதாக வெளிவந்த தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
 
சமீபகாலமாக அரசியல், சமூக பிரச்சினைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கருத்துகள் பதிவிட்டு பரபரப்பாகி வரும் நடிகை கஸ்தூரி தற்போது கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். கமல்ஹாசன் கட்சியில் சேர கஸ்தூரி முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன
 
இதுகுறித்து கஸ்துரியிடம் கேட்டபோது அவர் அளித்த பேட்டி வருமாறு:-
 
“நான் தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல்கள் பரவின. இப்போது கமல்ஹாசன் கட்சியில் சேரப்போவதாக பேசுகிறார்கள். பிறந்தநாளையொட்டி கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
 
அரசியல் கட்சிகளில் சேருவது குறித்து உடனடியாக எந்த முடிவையும் நான் எடுத்துவிட மாட்டேன். அரசியல் என்பதை கெட்டவார்த்தையாக பார்க்கும் சூழ்நிலை இருக்கிறது. அரசியல்வாதிகள் அந்த மாதிரி ஆகிவிட்டார்கள். நான் சாதாரண பெண். அரசியல்வாதி கிடையாது.
 
அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன். சில நல்லவர்கள் தற்போது புதிய அரசியல்வாதிகளாக உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். நான் ராமராக இருக்க ஆசைப்படவில்லை. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அணில் மாதிரி இருந்தால்போதும் என்று நினைக்கிறேன்.
 
தமிழக மக்கள் சிலர் தீக்குளித்து இறந்து இருக்கிறார்கள். அந்த நெருப்பை பார்த்து என் போன்றவர்கள் வயிறு எரிகிறது. தமிழகத்தில் நல்ல தொரு மாற்றம் வர வேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பமாக இருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னால் மக்களின் அணுகுமுறைகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
 
கமல்ஹாசன் கட்சி தொடங்கி அந்த மாற்றத்தை கொண்டு வந்தால் வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஏதேனும் அரசியல் கட்சியில் சேருவீர்களா? என்று என்னிடம் கேட்கப்படுகிறது.
 
தி.மு.க உள்பட எல்லா அரசியல் கட்சிகளிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வருகிறது. ஆனால் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுத்து விடாதே?
 
உன் சேவை எனக்கு தேவை என்று டொனால்டு டிரம்ப் என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்(சிரிப்பு). எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இப்போது எனக்கு இல்லை.” இவ்வாறு கஸ்தூரி கூறினார்.
 

மூலக்கதை