‘இந்திய அணிக்கு தேவைப்படுகிறார்’: சரியான நேரத்தில் டோனி விலகுவார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘இந்திய அணிக்கு தேவைப்படுகிறார்’: சரியான நேரத்தில் டோனி விலகுவார்

புது டெல்லி: நியூசிலாந்துக்கு எதிராக, கடந்த 4ம் தேதி நடைபெற்ற 2வது டி20 போட்டியில், 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
நியூசிலாந்து நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில், டோனி 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். ஆனால் தனது இன்னிங்ஸை அவர் மிகவும் மெதுவாகதான் தொடங்கினார்.

இந்திய பேட்ஸ்மேன்கள் மீது செலுத்திய ஆதிக்கத்தை நியூசிலாந்து பவுலர்கள் பராமரிக்க, இது வழிவகை செய்து விட்டது. இதனால் விவிஎஸ் லட்சுமணன், அகர்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் டோனியை விமர்சனம் செய்துள்ளனர்.

டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு டோனி வழிவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சூடு பறக்க நடந்து கொண்டிருக்கும் இந்த விவாதத்தில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக்கும் இணைந்துள்ளார்.



இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘’அணியில் தனது பணி என்ன? என்பதை டோனி உணர வேண்டும். மிகப்பெரிய இலக்குகளை சேஸ் செய்கையில், தொடக்கத்தில் மெதுவாக விளையாடுவதை மாற்றி வேகமாக விளையாட வேண்டும்.

முதல் பந்தில் இருந்தே ரன்களை ஸ்கோர் செய்ய வேண்டும். டி20 கிரிக்கெட் என்றாலும் கூட, தற்போதைய நிலையில் இந்திய அணிக்கு டோனி தேவைப்படுகிறார்.

சரியான நேரத்தில் அவர் விலகுவார்.

எந்த ஒரு இளம் வீரருக்குமான வழியையும் டோனி ஒருபோதும் அடைக்கவில்லை’’ என்றார்.

.

மூலக்கதை