பிறந்தநாளில் புதிய செயலியை வெளியட்ட கமல்ஹாசன்

PARIS TAMIL  PARIS TAMIL
பிறந்தநாளில் புதிய செயலியை வெளியட்ட கமல்ஹாசன்

 சமீப காலமாகவே தனது அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாக பேசி வரும் கமல்ஹாசன் விரைவில் கட்சி குறித்த அறிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் அவரது பிறந்தநாள் அன்று அவரது கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் அதனை மறுத்திருந்தார். இந்நிலையில், புதிய ஆப் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. 

 
இந்நிலையில், நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்த கமல் ஹாசன் பின்னர் சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் பேசியதாவது, 
 
நல்லது செய்வதையும் பண்பறிந்து வெகு ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். அதேநேரத்தில் நல்லது செய்தால் மட்டும் போதாது, அதை சரியாக, சரியான மக்களுக்கு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நல்லதை சரியாக செய்தால் தான் அது அரசியல். அந்த வகையில் தானத்தை தவறான ஆட்களிடம் கொடுப்பது கூட ஒரு தவறுதான். 
 
 
 
தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் பழுதடைந்துள்ளது. பழுதை சரிசெய்ய மக்கள் ஒன்று திரள வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்து அறிய விரைவில் தான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். அரசியல் பயணத்திற்கு நிறைய முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் அஸ்திவாரத்தை வலுவாக அமைக்க வேண்டிய பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
 
நான் அரசியல் பொறுப்புக்கு வந்தால், என்னை நோக்கியும் கேள்விகள் எழுப்பப்படலாம். தான் தற்போது நியாயத்திற்காக குரல் எழுப்பும் செயலி ஒன்றை அறிமுகம் செய்கிறேன். அதற்கு "மய்யம் விசில்" என்று பெயர் வைத்துள்ளதாக கூறிய கமல், மக்கள் பிரச்சனைகள், மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்திற்காக இந்த செயலியை பயன்படுத்த கோரினார். 
 

மூலக்கதை