அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையத்தை சீனாவுக்கு வழங்கவிருந்த மகிந்த

என் தமிழ்  என் தமிழ்
அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையத்தை சீனாவுக்கு வழங்கவிருந்த மகிந்த

அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், மத்தல விமான நிலையத்தையும், சீனாவுக்குக் குத்தகைக்கு விடுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார் என்று, தென்மாகாண அமைச்சர் எச்.டபிள்யூ.குணசேன தெரிவித்துள்ளார்.

தெல்தெனியவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,

“முன்னர் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், மத்தல விமான நிலையத்தையும், சீனாவுக்குக் குத்தகைக்கு விடுவதற்குத் திட்டமிட்டிருந்த மகிந்த ராஜபக்ச, இப்போது அதற்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

எதிர்ப்புத் தெரிவிப்பதை விடுத்து கூட்டு எதிரணியினர் மக்களைக் கவரக் கூடிய எதையாவது செய்ய வேண்டும். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் எவராவது ஆர்ப்பாட்டம் நடத்த முடியாத நிலை இருந்தது.

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, 2000 ஏக்கர் காணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்றுள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளின்றி, நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை