வடக்கிலும் தெற்கிலும் மனிதநேயமிக்க மனிதர்கள் இருக்கின்றார்கள்

என் தமிழ்  என் தமிழ்
வடக்கிலும் தெற்கிலும் மனிதநேயமிக்க மனிதர்கள் இருக்கின்றார்கள்

இலங்கை நாட்டில் சிங்­கள மக்கள் மட்­டுமே நல்­லவர்கள் என நாம் நினைத்­து­வந்தோம். ஆனால் வடக்­கிலும் நல்ல மனி­தர்கள் இருக்­கின்­றார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்­துள்ளார்.

பயா­கல இந்து வித்­தி­யா­ல­யத்தின் வரு­டாந்த பரி­ச­ளிப்பு விழா நிகழ்வில் நேற்று முன்­தினம் பிர­தம விருந்­தி­னராக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கலந்துகொண்டு உரை­யாற்­றும்­போது இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர்,

வடக்­கிலும் தெற்­கிலும் மனி­த­நே­ய­மிக்க மனி­தர்கள் இருக்­கின்­றார்கள். குறு­கிய அர­சியல் நோக்­கமும் அதிக ஆசை பிடித்த தலை­வர்­க­ளுமே இந்த மனித நேயத்­திற்கு வேட்­டு­வைக்­கின்­றனர்.

ஒரே நாடு ஒரே தேசம் என்று இருந்தால் ஒரு தலைவர் இருப்பார். ஆனால் நாடு சிறு துண்­டு­க­ளாக இன ரீதி­யா­கவும் மத ரீதி­யா­கவும் பிரிக்-­கப்­பட்டால் பல தலை­வர்கள் இருப்பார்கள். சிறந்த தலை­மைத்­துவம் உரு­வாக பிணக்­குகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும். அவ்வாறு செய்­பவர் சிறந்த தலை­வ­ராக உரு­வாகுவார். அனை­வரும் ஒன்­று­பட்டால் தலைமைத்­துவம் உரு­வாகும்.

ஆகவே அர­சி­யல்­வா­திகள் தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காக போரா-டுவதை நிறுத்திக்கொள்ள வேண்-டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை