'குஜராத் தேர்தல் தேதியை மோடி அறிவிப்பார்': சிதம்பரம் கிண்டல்

தினமலர்  தினமலர்
குஜராத் தேர்தல் தேதியை மோடி அறிவிப்பார்: சிதம்பரம் கிண்டல்

புதுடில்லி : ''குஜராத் சட்டசபைக்கான தேர்தல் தேதியை அறிவிக்கும் அதிகாரத்தை, பிரதமர், நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ளது,'' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, சிதம்பரம், கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

காங்., விமர்சனம்:


ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் தேதிகளுடன், குஜராத் சட்டசபைக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. பிரதமர், நரேந்திர மோடியின் தலையீட்டால், தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளதாக, காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து வருகிறது.

கிண்டல்:


இந்த நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சிதம்பரம், 'டுவிட்டர்' சமூக தளத்தில் கூறியுள்ளதாவது: குஜராத் அரசு, அனைத்து சலுகைகளையும் அறிவித்த பின், விடுமுறையில் இருந்து, தேர்தல் ஆணையம் அழைக்கப்படும். வரும் ஞாயிற்றுக்கிழமை, ஐந்தாவது முறையாக குஜராத் செல்ல உள்ள, பிரதமர் நரேந்திர மோடியே, பிரசார கூட்டத்தில் குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்கும் அதிகாரத்தை அவருக்கு தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மூலக்கதை