நாகை பணிமனை விபத்து: பலியானவர்களின் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
நாகை பணிமனை விபத்து: பலியானவர்களின் ...

இன்று காலை நாகை பொறையார் பணிமனையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பணிமனையில் உறங்கி கொண்டிருந்த 8 ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.    இந்த நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ. 7. 5 லட்சம் நிதியுதவியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1. 50 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50ஆயிரமும் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.   மேலும் பலியான ஓட்டுனர், நடத்துனர் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பழனிச்சாமி, பலியானவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை