மெர்சல் குறித்த பாஜக தலைவர்களின் கருத்துக்கு நடிகை காயத்ரி ரகுராம் எதிர்ப்பு

தினகரன்  தினகரன்

சென்னை: மெர்சல் விவகாரத்தில் பாஜக தலைவர்களின் கருத்துக்கு அதே கட்சியை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். மெர்சல் விவகாரத்தில் நடிகர் விஜய்யை குறை கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. படத்தில் வரும் வசனங்களை அவர் எழுதவில்லை. மேலும் சென்சார் தணிக்கைக்கு பிறகே படம் வெளியாகியுள்ளது என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை