என்னை பலாத்காரம் செய்த முதல்வர் உள்பட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: – சரிதா நாயர்

என் தமிழ்  என் தமிழ்
என்னை பலாத்காரம் செய்த முதல்வர் உள்பட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: – சரிதா நாயர்

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உம்மன்சாண்டி உட்பட தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு சரிதா நாயர் கடிதம் அனுப்பியுள்ளார். கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் சரிதா நாயர். கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உம்மன்சாண்டி தலைமையிலான கடந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ெபரும்பாலான அமைச்சர்கள் என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தினர். அவர்கள் பெண்களை ஒரு போக பொருளாகத்தான் கருதினர்.

அதில், நானும் பலிகடா ஆக்கப்பட்டேன். இது குறித்து நான் விசாரணை குழு தலைவராக இருந்த ஏடிஜிபி ஹேமச்சந்திரனிடம் கூறினேன். ஆனால், அது குறித்து விசாரணை நடத்த முடியாது என்று ஹேமச்சந்திரன் கூறிவிட்டார். நான் திருவனந்தபுரம் சிறையில் இருந்தபோது முன்னாள் அமைச்சர் கணேஷ் குமாரின் உதவியாளர் மாறுவேடத்தில் என்னை வந்து சந்தித்தார். அப்போது, உம்மன்சாண்டி மற்றும் அமைச்சர்கள் மீது புகார் கூறக் கூடாது என்று என்னிடம் கூறினார்.

வாரன்ட் இல்லாமல் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். எனக்கு தெரியாமலே என் வீட்டில் சோதனை நடத்தி லேப்டாப், செல்போன்களை கைப்பற்றி சென்றனர். அப்போது எர்ணாகுளம் ஐஜியாக இருந்த பத்மகுமார் என் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த வீடியோக்களை வௌியே விட்டார். எனவே, சோலார் கமிஷன் அறிக்கையில் கூறியுள்ளபடி உம்மன்சாண்டி உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது. இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை