விஜய்யின் பொருளாதார அறிவீனத்தை மெர்சல் காட்டுகிறது… பாஜக எச்.ராஜா

FILMI STREET  FILMI STREET
விஜய்யின் பொருளாதார அறிவீனத்தை மெர்சல் காட்டுகிறது… பாஜக எச்.ராஜா

மெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் தற்போது தமிழ் சினிமாவையும் அரசியலையும் ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

இந்த காட்சிகளுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு உள்ளது.

ஆனால் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் இந்த வசனங்களை நீக்க வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழிசை சவுந்தரராஜன் முதலில் எதிர்ப்பு குரல் கொடுக்க, பின்னர் பொன். ராதாகிருஷ்ணனும் தன் கருத்தை வெளியிட்டார்.

தற்போது பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும் தன் எதிர்ப்பு கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள பல்வேறு ட்வீட்டுக்கள் இதோ…

H Raja‏Verified account @HRajaBJP

ஏற்கனவே நாடுமுழுவதும் பள்ளி கல்வி மற்றும் மருத்துவம் அரசு பள்ளி மற்றும் அரசு மருத்துவமனையில் இலவசம் தான்.

H Raja‏Verified account @HRajaBJP
H Raja Retweeted vasudevan
தமிழகத்தில் கடந்த 20 yr கட்டப்பட்ட சர்ச் 17500, மசூதிகள் 9700, கோவில்கள் 370 இப்ப எதை தவிர்த்து மருத்துவ மனை கட்டணும் என்கிறார் விஜய்

விஜய் அவர்களின் வருமான வரி ஏய்ப்பு செய்தி பற்றி விளக்கம் எதிர்பார்க்கலாமா?

சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம்.ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்பே மெர்சல்.

மெர்சல் பட வசனம் விஜய் அவர்களின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுகிறது. முதலில் GST புதிய வரி அல்ல சாராயத்திற்கு 58% மேல் வரி விதிக்கப்படுகிறது.

BJP H Raja condemned Vijay dialogues in Mersal

மூலக்கதை