ஐசிஎப் தொழிற்சாலைக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் வாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐசிஎப் தொழிற்சாலைக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் வாய்ப்பு

சென்னை : இந்திய அரசின் குறு, சிறு, நடுத்தர  தொழில்கள் வளர்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனமும், இணைப்பு பெட்டிகள் தொழிற்சாலையும் இணைந்து  தேசிய அளவிலான தொழிற் கண்காட்சி, கருத்தரங்கை வருகிற 27, 28 தேதிகளில் சென்னை ஐசிஎப் வளாகத்தில் உள்ள ஏடபிள்யூடிஐ  அரங்கத்தில் நடத்துகின்றன. இந்த கண்காட்சியில் இணைப்பு பெட்டித் தொழிற்சாலை மற்றும் தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில்வே தொழிற்சாலைக்கு தேவையான ஆயிரத்திற்கும் அதிகமான உதிரிபாங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.

அவற்றின் தேவைகள், தொழில் வாய்ப்புகள்,  வாய்ப்புகளை பெறுவதற்கான தகுதிகள் குறித்து கருத்தரங்கில் விளக்கப்படும்.

மேலும் குறு, சிறு தொழில்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு  வகுக்கப்பட்டிருக்கும் கொள்கைகள், சலுகைகள் உள்ளிட்ட விவரங்களும், சந்தேகங்களுக்கு தீர்வுகளும் கருத்தரங்கள் மூலம் பெறலாம். கண்காட்சியை பார்வையிட, கருத்தரங்கில் பங்கேற்க கட்டணம் இல்லை.
கருத்தரங்கில்  பங்கேற்க விருப்பம் உள்ள தொழில் முனைவோர்கள்  அக். 26ம் தேதிக்குள் உத்யோக் ஆதார் நகலுடன் வந்து  சென்னை, கிண்டியில் உள்ள எம்எஸ்எம்ஈ அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை.

மேலும் விவரங்கள் அறிய விரும்புபவர்கள்   என். சிவலிங்கம், எம்எஸ்எம்ஈ  உதவி இயக்குனரை 97907 54446 அல்லது 99403 18891 என்ற செல்ேபான் எண்களில் தொடர்பு கொள்ளவும்.  

.

மூலக்கதை