மத்திய அரசு குறித்து தவறான கருத்து : நடிகர் விஜய்க்கு மத்திய அமைச்சர் கண்டனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அரசு குறித்து தவறான கருத்து : நடிகர் விஜய்க்கு மத்திய அமைச்சர் கண்டனம்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று அளித்த பேட்டி: நடிகர் விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள மெர்சல் படத்தில் மத்திய அரசின் திட்டத்தை விமர்சித்து தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. அந்த நாட்டில் அவ்வளவு தான் ஜிஎஸ்டி வசூலிக்கிறார்கள்.

அங்கு இலவச மருத்துவம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இவ்வளவு வரி விதித்தும் ஏன் இலவச மருத்துவம் வழங்கவில்ைல என ஜிஎஸ்டி விமர்சிக்கப்படுகிறது.

அதுபோல் பண மதிப்பிழப்பு குறித்தும் தவறாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த விமர்சனத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும். அரசியல் காரணங்களுக்காக தவறான கண்ணோட்டத்தை மக்கள் மத்தியில் பரப்ப கூடாது.



பண மதிப்பிழப்பை வரவேற்று தெரிவித்த கருத்துகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கமல் கூறியிருப்பதாக அறிந்தேன். அவர் எதையும் தெளிவாக தெரிந்துகொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும்.

அவசர கோலத்தில் கருத்து தெரிவித்துவிட்டு பின்னர் அரசியல் காரணத்துக்காக திரும்ப பெறுகிறேன் என கூறுவது நாகரீகம் அல்ல. பண மதிப்பிழப்பை வரவேற்றது தவறு என கூறிய கமல், மீண்டும் அதை வரவேற்கிறேன் என கூற வாய்ப்பு உண்டு.

காதல் திருமணங்களை லவ் ஜிகாத்தாக பார்க்க கூடாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

வேற்று மதத்தினர் காதல் திருமணம் செய்வதை எதிர்ப்பதில்லை. ஆனால் கட்டாயப்படுத்தி காதல் திருமணம் செய்வதை தான் கூடாது என்பது என் கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை